Tuesday, February 18, 2014

தலைவலிக்காக மாத்திரை வாங்க வந்தார்.


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,



"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

பெண்ணே உங்கள் வருங்கால கணவர்

1. கார் வைத்து இருக்க வேண்டும்,

2. சொந்த வீடு இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் (சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),

3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,

4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,

5. அக்கா தங்கை இருக்க கூடாது,

6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)

8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,

9. பிட்டாக இருக்க வேண்டும்,

10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),

11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?


மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை. காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

Monday, May 28, 2012

ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013


ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013,

  1. ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்?
  2. ந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின்படி 
  3. பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொதுமாறுதல்விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  4. ந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின்படி 
  5. தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  6. பள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான
  7. விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  8. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான 
  9. விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி  அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  10. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  11. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  12. பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம்
  13.  [EDITABLE EXCEL FORMAT]
  14. பள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம்
  15.  [EDITABLE EXCEL FORMAT].
  16. TAMIL FONTS DOWNLOAD.